Loading...
- முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
- 2வது ஒருநாள் போட்டி இன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது. 350 ரன் இலக்கை நெருங்கி வந்த நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
Loading...
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.
Loading...