நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புத்தாண்டின் முதல் வாரத்தில் புதன் தனது ராசியை மாற்றுகிறார்.
அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி மதியம் 12:11 மணிக்கு புதன் தனுசு ராசிக்கு மாறுகிறார்.
அந்தவகையில், 2025ல் புதனின் இடப்பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு நற்பலன் கிடைக்கும்.
மிதுனம்
செல்வச் செழிப்புடன், தொழிலதிபர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
திருமணமான தம்பதியினரிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இதன் காரணமாக உறவு முன்பை விட வலுவடையும்.
முடிவடையாமல் இருந்த பணிகள் விரைவில் முடியும்.
ஜனவரி 4ஆம் திகதிக்குள் கடை வாங்கும் வியாபாரிகளின் கனவு நிறைவேறும்.
திருமண யோகம் கைகூடி வரும்.
துலாம்
வருமானம் அதிகரிப்பதன் காரணமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.
சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுபவர்களுக்கு சமூகத்தில் நற்பெயர் ஏற்படும்.
வழக்குகள் ஏதேனும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் வெற்றி பெறலாம்.
34 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சளி, மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இது தவிர மாணவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மகரம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிறுவனத்தின் சார்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
திருமணமானவர்களின் உறவில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
முதியவர்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சொந்த பெயரில் வீடு வாங்க நினைப்பவர்களின் கனவு விரைவில் நிறைவேறும்.
தொழிலதிபர்களின் லாபம் அதிகரிப்பதால் சொத்து, வீடு, கார் வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.