Loading...
புத்தளம் – தில்லையடி பகுதியில் முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து ரத்மல்யா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டிகள் இரண்டும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுவதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.
Loading...
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் சிறிய காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.



Loading...








































