Loading...
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றும் ஒருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவரே மயங்கிவிழுந்து மரணமடைந்துள்ளார்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை, வத்தேகம – உடதலவின்னவில் 71 வயதான ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
Loading...
இந்நிலையில்,நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றைதினம் நிட்டம்புவ – ஹொரகொல்ல பிரதேசத்தில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...








































