பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க கண்ட கண்ட மாத்திரகளை வாங்கி சாப்பிடுவது உண்டு.
இதனால் சிலருக்கு முதல் நாள் வலி நீங்கும். மறுநாள் அதிகரிக்கும்., இது போல இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி ஏற்படும் பொழுது எப்படி படுத்து உறங்க வேண்டும்?
அந்த நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்போம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
மாதவிடாய் காலங்களில் சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இந்நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் உங்களுக்கு பதட்டம் மற்றும் ஒரு விதமான மனபயம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
அடுத்ததாக மாதவிடாய் காலங்களில் எண்ணெயில் முழுவதுமாக பொரித்து எடுக்கப்பட்ட தின் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து, காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவர்கள் மாதவிடாய் சமயங்களில் அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக அளவு காபி மற்றும் டீ எடுத்துக் கொள்வதால் நெஞ்செரிச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
மேலும் கால்சியம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்துள்ள பால் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை இந்நேரத்தில் அதிகம் எடுத்துக் கொள்வதால் தசை வலி, உடல் சோர்வு மற்றும் மார்பகங்களில் வலி ஏற்படக்கூடும் என்பதால் இவற்றின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
சரிசெய்ய வழிமுறை
வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி தீர்வதற்கு நீங்கள் படுக்கும் பொழுது உங்களுடைய இரு கால்களையும் சுவற்றின் மீது தூக்கி வைத்து படுத்து பாருங்கள், வலி சற்று குறைவது போல உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
நேராக படுத்துக் கொண்டு தலைக்கு ஒரு தலையணை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கால்களை தூக்கி சுவற்றின் மீது வையுங்கள்.
அதற்கு ஏற்றார் போல நீங்கள் இடத்தை பார்த்துக் கொள்வது நல்லது. இப்படி தொடர்ந்து 10 நிமிடம் காலை தூக்கி மேலே வைத்தால் வயிற்றில் ஏற்படக் கூடிய அழுத்தம் குறைந்து வயிறு வலி மற்றும் இடுப்பு வலி தீர்ந்து மன அமைதி ஏற்படும்.
இரவில் தூக்கம் வராதவர்கள் இது போல செய்து பாருங்கள், நிம்மதியான தூக்கம் வந்துவிடும்.








































