Loading...
கோட்ட கோ கம போராட்டம் தொடர வேண்டும் என்றும், போராட்டத்தில் தலையிடப் போவதில்லை எனவும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வளுகாராமய ரஜமஹா விகாரைக்கு இன்று(வியாழக்கிழமை) விஜயம் செய்த பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு பொலிசார் எதுவும் செய்ய மாட்டார்கள் எனவும், போராட்டம் தொடர வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும், அமைச்சரவையை அமைப்பது குறித்து தாம் முடிவு செய்யவில்லை எனவும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிருபிக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...








































