Loading...
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஓபநாயக்க ஹுனுவல பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சம்பவித்த விபத்தில் மத்தீத மந்தினு என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
பிரேத பரிசோதனை
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நேற்று கஹவத்தை ஆதார மருத்துவமனையில் நடைபெற்றது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































