இரட்டை குடியுரிமை உடைய நபர் அரசியலில் அல்லது அரச உயர்பதவி வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இரட்டை குடியுரிமையுடைய இருவர் இதுவரையில் அரசியல் மற்றும் அரச உயர் பதவியில் செல்வாக்கு செலுத்தியுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு 21ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார கேட்டுக்கொண்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் போது முறையான ஒழுங்கு முறைமை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இல்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச தலைவர்களுக்கிடையில் நிலவிய அதிகார போட்டித்தன்மை மீண்டும் நிலவும் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
முழு நாடும் அரசியலமைப்பு திருத்தத்தை கோரும் நிலையில் பொதுஜன பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கு முரணாக செயற்பட முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே சமூக கட்டமைப்பில் நிலவும் அமைதியற்ற தன்மைக்கு தீர்வு காண முடியும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (நன்றி கேசரி)








































