தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 09ம் திகதி அலரிமாளிகை அருகே மைனா கோ கம, காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்
அவரைக் கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் ஒரு வாரத்துக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தான் கைது செய்யப்படுவதில் இருந்து தடுக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் ஜோன்ஸ்டன் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் சார்பில் சட்டத்தரணியொருவர் குறித்த ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.








































