அரசாங்கத்தின் பிரபல அமைச்சின் ஆலோசகராக பதவி வகிக்கும் 70 வயதுடைய கலாநிதி ஒருவரால் இளம் ஜப்பானிய மொழி ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கொழும்பு பொது நூலகத்தில் விரிவுரை வழங்குவதற்காக முறைப்பாட்டாளரான ஆசிரியையை ஆலோசகர் அழைத்து வந்துள்ளார்.
அவர் கொழும்பு வந்ததையடுத்து விரிவுரை இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது விரிவுரைகள் தொடர்பான கணினி விளக்கக்காட்சியில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய தன்னுடன் வருமாறு கூறி அமைச்சின் ஆலோசகர் வசிக்கும் மொரட்டுவையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த ஆசிரியை இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதில் இருந்து தப்பி ஒடி வந்தவர் தனது தந்தையுடன் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய அமைச்சின் ஆலோசகர் நேற்று பிற்பகல் மொரட்டுவ பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








































