ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சரான நாலக கொடஹேவா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக நாலக கொடஹேவா தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் நோக்கமில்லா சந்திப்பு
அத்துடன் அரசியல் மறுசீரமைப்புகள் குறித்த கருத்துக்களை முன்வைப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதே தவிர இதில் எதுவிதமான அரசியல் நோக்கங்களும் இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெருமவுடன் அணிசேர்ந்துள்ள ஆளுங்கட்சியின் அதிருப்தியாளர் குழுவில் நாலக கொடஹேவாவும் உள்ளடங்கி இருப்பதுடன், அரசாங்கத்துக்கு எதிரான புதிய அணியொன்றைத் திரட்டுவதில் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








































