Loading...
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், மன்னார் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்களும், வைத்தியர்களும் இணைந்து எரிபொருள் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
Loading...
அத்துடன், கோரிக்கை கடிதம் ஒன்றையும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கையளித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை தொடக்கம் விசேட ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Loading...








































